Home கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் 26 வயதுடைய இளைஞன் கொடூரமாக கொலை

கிளிநொச்சியில் 26 வயதுடைய இளைஞன் கொடூரமாக கொலை

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.

இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியும் உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மற்றும் உறவினர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleநெல்லியடி கூட்டு வன்புணர்வு – 09 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது
Next articleபள்ளத்தில் பாய்ந்த பஸ்: பதினைந்து பேர் காயம்