Home கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு போதைப் பொருள் கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து உடல் உறவு வைத்த...

கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு போதைப் பொருள் கொடுத்து நண்பர்களுடன் சேர்ந்து உடல் உறவு வைத்த 17 வயதுச் சிறுன்!!

கிளிநொச்சியில் 14 வயதான சிறுமியொருவர் காதலனால் போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, காதலனின் நண்பர்களாலும் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியே பாதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹெரோயினுக்கு அடிமையான 17 வயதான சிறுவன் ஒருவன், 14 வயது சிறுமியை காதலித்துள்ளான்.

வீட்டைவிட்டு ஓடிச்செல்வோம் என சிறுவன் சொன்ன யோசனையின் அடிப்படையில், சில வாரங்களின் முன்னர் வீட்டிலிருந்து 5 பவுண் நகையுடன் சிறுமி தலைமறைவானார்.

சிறுமியை அழைத்துக் கொண்டு, 17 வயது காதலன் கொழும்பு சென்றுள்ளார்.

அங்கு நண்பர்களுடன் தங்கியிருந்துள்ளார். காதலனாலும், 3 நண்பர்களாலும் சிறுமி வன்புணரப்பட்டுள்ளார்.

பின்னர் சிறுமியை சொந்த ஊருக்கு அழைத்து வந்து, வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு காதலன் தலைமறைவாகி விட்டார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபாராளுமன்றத்துக்கு அருகில் இளம் பெண்ணின் சடலம் மிதக்கிறது
Next articleயாழ்.அத்தியடியில் அடித்துக் கொல்லப்பட்ட கலாநிதி! மகளைக் கொல்லவும் திட்டம் தீட்டிய கொலையாளி!