கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட மருத்துவர் ஒருவர் உட்பட 12 பேருக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது என பிராந்திய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் அண்மைய நாட்களில் குறைந்திருந்த கோவிட் 19 தொற்று நேற்றைய தினம் அதிகரித்துள்ளது.
மேற்படி கோவிட் 19 தொற்றாளர்கள் அனைவரும் சமூகத்திலிருந்து தொற்றுக்குள்ளானவர்கள் எனத் தெரிவித்துள்ள சுகாதார பிரிவு,
பொது மக்கள் அனைவரும் முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றவது மிக மிக அவசியம் எனவும் தேவையற்ற நிகழ்வுகள்,
தேவையற்ற வெளி நடமாட்டங்கள் என்பவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கோவிட் 19 தடுப்பூசி பெற்றுக்கொண்டிருப்பினும் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.