கிளிநொச்சியில் மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன் தற்கொலை
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பரந்தன் சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (01) நண்பகல் இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மனைவியின் சேலையில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இச் சம்பவத்தில் 38 வயதுடைய
வேலாயுதம் சிவஞானம் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய சிவஞானம் குகனேஸ்வரி என்வருமே உயிரிழந்துள்ளனர்.
இவர்களுக்கு 16 வயதில் மகளும், 13 மற்றும் 06 வயதில் இரணடு மகன்களும் உள்ளனனர்.
குடும்பத்தலைவனின் இச்செயற்பாட்டினால் மூன்று பிள்ளைகளும்
நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலீஸார் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்