Home கிளிநொச்சி செய்திகள் கிளாலியில் வெடிவிபத்து: நாளை பரீட்சைக்கு தோற்றும் மாணவி படுகாயம்!

கிளாலியில் வெடிவிபத்து: நாளை பரீட்சைக்கு தோற்றும் மாணவி படுகாயம்!

கிளிநொச்சி மாவட்டம் பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் தெரியவந்துள்ளது.

காயமடைந்த சிறுமி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
READ MORE >>>  இன்று முதல் வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்லலாம்; இராணுவ தளபதி.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  சமையல் எரிவாயு குறித்து விசேட வர்த்தமானி
READ MORE >>>  18 வயதான யுவதி இனந்தெரியாத நபரால் பாலியல் துஷ்பிரயோகம்: பண்டாரவளையில் சம்பவம்!
Previous articleதமிழக மக்களின் மனிதாபிமான நன்கொடை பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன
Next articleஇன்றைய ராசிபலன் – 23/05/2022, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்