Home கிண்ணியா செய்திகள் கிண்ணியா நடுஊற்று பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் 3 சந்தேகநபர்கள் கைது

கிண்ணியா நடுஊற்று பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் 3 சந்தேகநபர்கள் கைது

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நடுஊற்று பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் T56 ரக துப்பாக்கியுடன் இன்று அதிகாலை 3 பேர் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் கிண்ணியா – சூரங்கல் பகுதியைச் சேர்ந்த பீர் முகம்மது முகம்மது முஜீப் (30 வயது) மட்டக்களப்பு விமானப்படை முகாமில் கடமையாற்றி வருபவர் எனவும், இவர் கடந்த 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

22 6227220eec0d9 - கிண்ணியா நடுஊற்று பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் 3 சந்தேகநபர்கள் கைது

இதேவேளை நடுஊற்று பகுதியிலுள்ள களப்புக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தக்கூடிய 9 ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இரு தரப்பினருக்கிடையிலான தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

more news… visit here
Dit1skexcaitxev - கிண்ணியா நடுஊற்று பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் திருகோணமலையில் 3 சந்தேகநபர்கள் கைது
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c