Home Local news கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர், இன்று (17) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

வில் வெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இஸ்மாயில் றிஸ்வி (வயது 42) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உப்பாறு கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் கூடுகளில் மீன்களைச் சேகரிக்கச் சென்ற மீனவர்களால், சடலம் அவதானிக்கப்பட்டு தமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா உப்பாறு கடற்கரையில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் சடலமாக மீட்பு

கிண்ணியா தள வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஆசிரியரின் வீட்டில் திருடியவர் சிக்கினார்
Next articleபிரித்தானியாவிலிருந்து யாழ் வந்த வைத்தியர் உயிரிழப்பு: கொரோனா தொற்று உறுதி