கிணற்றில் விழுந்த பெண்ணிற்கும், மயங்கி விழுந்த பெண்ணிற்கும் கொரோனா; வவுனியாவில் சம்பவம்.

வவுனியாவில் உயிரிழந்த இரு இளம் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த பெண் ஒருவர் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் 28 வயதான குடும்ப பெண்ணே உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை வவுனியா குருமன்காடு பகுதியில் திடீர் என மயங்கி விழுந்த 35 வயதான பெண் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த இருவருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..