Home திருகோணமலை செய்திகள் கிணற்றில் இருந்து 15 வயது சிறுவனின் சடலம் மீட்பு !

கிணற்றில் இருந்து 15 வயது சிறுவனின் சடலம் மீட்பு !

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் 15 வயது மாணவர் ஒருவர் கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த குறித்த மாணவர், விடுதிக்கு அருகிலிருந்த கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

கிணற்றில் நீராடச்சென்ற மாணவனே நேற்று(02) மாலை கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஒரு ரவுண்ட் அடிக்க, ஒன்றரை அடித்தவர் ​சிக்கினார்
Next articleயாழில் பாரிய சமூகபிரச்சனையாக உருவெடுத்துள்ள போதைப்பொருள்!