கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

கலேவெல காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலகிரியாகம – பஹலவெவ பிரிவில் வீடொன்றிற்கு அருகிலுள்ள கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான ஆர்.எம்.பத்மலதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி இரவு அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்றதாகவும், அவர் வரும் வரை உறங்கிக் கொண்டிருந்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் காலை வரை மனைவி வீடு திரும்பாத காரணத்தினால், வீட்டுக்கு முன்னால் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் மனைவியின் காலணி இருப்பதைக் கண்டு, கிராம மக்களுடன் சேர்ந்து கிணற்றில் தேடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் தம்புள்ளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..