காலி முகத்திடல் போராட்டத்தில் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்: குழப்பத்தில் ஈடுபட்ட பிக்கு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக காலி முகத்திடலில் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது.

சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதம் பாடப்பட்டமை தொடர்பில் பலர் கேள்வி எழுப்பிவந்த நிலையில்,இன்றைய தினம் தமிழ் மொழியில் பாடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதன்போது அங்கு வந்த பிக்கு ஒருவர் தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாமென குழப்பம் விளைவித்த காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள்,இளைஞர்கள்,பொதுமக்கள் இணைந்து குறித்த பிக்குவிற்கு சில விடயங்களை தெளிவுப்படுத்தியுள்ளதுடன்,,நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

காலி முகத்திடல் போராட்டத்தில் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்: குழப்பத்தில் ஈடுபட்ட பிக்கு காலி முகத்திடல் போராட்டத்தில் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்: குழப்பத்தில் ஈடுபட்ட பிக்கு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..