Home Local news காலி முகத்திடலில் ஹீரோவாகிய பொலிஸ் அதிகாரி, போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் புலனாய்வு பிரிவினரால் கைது

காலி முகத்திடலில் ஹீரோவாகிய பொலிஸ் அதிகாரி, போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் புலனாய்வு பிரிவினரால் கைது

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார்.

இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய அவர்,

“இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார்.

நாளை என்னை வேலையிலிருந்து நீக்கப் போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன். என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”.

மேலும், பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

அவர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அருகில் கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தலையிட முயன்றார், ஆனால் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை, அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியதாக பொலிஸ் கான்ஸ்டபிள் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று 6ஆவது நாளாக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்பொழுது புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

more news… visit here
READ MORE >>>  மானிப்பாய் பகுதியில் இரு பெண்களுடன் ஒரே நேரத்தில் ஜல்சா பண்ணிய பிரான்சிலிருந்து வந்த 57 வயது முதியவர்
READ MORE >>>  இந்திய துணைத்தூதுவரால் இலங்கை மாணவிகள் கௌரவிப்பு!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  மானிப்பாய் பகுதியில் இரு பெண்களுடன் ஒரே நேரத்தில் ஜல்சா பண்ணிய பிரான்சிலிருந்து வந்த 57 வயது முதியவர்
Previous articleநீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு!
Next articleரூ.45 மில்லியன் பெறுமதியான கஞ்சா மீட்பு: பேசாலை மீனவர் 3 பேர் கைது!