கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரையில் நேற்று (29) பிற்பகல் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவரின் வயது 30-40 வயதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடத்தில் மேல் சட்டை இருக்கவில்லை. கருப்பு நிற முழு காற்சட்டை அணிந்துள்ளார்.
பல நாட்கள் தண்ணீரில் இருந்ததால், உடலில் உள்ள இடங்களில் தோல் உதிர்ந்து காணப்படுகிறது.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.