Home Accident News எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரை பதம்பார்த்த இரும்புக் கம்பி

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரை பதம்பார்த்த இரும்புக் கம்பி

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்ற காரின் சாரதி மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவமொன்று கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு 7 பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காரொன்றில் சாரதியொருவர் காத்திருந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கார் தரித்து நின்ற பகுதியில் கட்டிட நிர்மாண பணிகள் இடம்பெற்று வந்துள்ளது. இதன்போது கட்டிட நிர்மாணப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்புக் குழாய்யொன்று மேலிருந்து கீழ்நோக்கி காரின் மீது வீழந்துள்ளதில் காரின் முன்பக்க கண்ணாடியை துழைத்துக்கொண்டு சாரதியின் இருக்கையை நோக்கி வந்துள்ளது.

இந்நிலையில் சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ள நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபழுதடைந்த பல்லை பிடுங்கிக் கொண்டு வந்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி: யானை முத்து என நினைத்து பிடித்த பொலிசார்!
Next articleநீர் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு; நால்வர் கைது