“நானும் ரவுடி தான்”, “கதுவாக்குல ரெண்டு காதல்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா – விஜய் சேதுபதி ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
இவர்களுடன் சமந்தாவும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மாஸ்டர் அண்ட் கோப்ரா படத்தின் தயாரிப்பாளரான லலித் குமார் தயாரித்துள்ளார், விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் கதீஜாவாக சமந்தா நடிக்கிறார். கண்மணியாக நயன்தாரா நடிக்கிறார். ராம்போ கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் முன்னோட்டங்களை வைத்து பார்க்கும்போது, விஜய் சேதுபதி அவர்கள் இருவரையும் காதலிப்பது போல் கதை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் சென்சார் போர்டு மூலம் தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் என கூறப்படுகிறது.