Home lifestyle news காதலித்து ஏமாற்றிச் சென்ற காதலிக்காக இலங்கையில் 10 வருடங்களாக காத்திருந்த காதலன்

காதலித்து ஏமாற்றிச் சென்ற காதலிக்காக இலங்கையில் 10 வருடங்களாக காத்திருந்த காதலன்

காதலித்து ஏமாற்றிச் சென்ற காதலிக்காக இலங்கையில் 10 வருடங்களாக காத்திருந்த காதலன்! இருட்டிலிருந்து காப்பாற்றிய இளைஞன்

கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட்களாக இருந்த மனநலம் பாதிக்கட்ட நபரின் வாழ்க்கையை மாற்றிய இளைஞன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பெண் ஒருவர் காதலித்து விட்டு ஏமாற்றிச் சென்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த குறித்த இளைஞன் தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

பேராதனை பல்கலைகழக மாணவனான குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். என்றாவது ஒரு நாள் தனது காதலி கிடைப்பார் என்ற நம்பிக்கையிலேயே நீண்ட காலமாக பல்கலைக்கழக வாசலில் காத்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த இலங்கையில் பிரபலமடைந்த யூடிப்பர் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு கொடுக்க தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பில் இருந்து பேராதனை சென்ற இளைஞன், மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் உரையாடியுள்ளார். அவரை அழைத்து சென்று தலை முடியை வெட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொடுத்துள்ளார்.

தன்னால் முடிந்த உதவிகளை செய்த யூடியுப் பிரபலம் மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோரை தேடி அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கமைய, பெற்றோர் அவரை மீண்டும் தங்களுடன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று அவரை குணப்படுத்துவதற்கும் யூடியுப் பிரபலம் உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காதலித்து ஏமாற்றிச் சென்ற காதலிக்காக காதலித்து ஏமாற்றிச் சென்ற காதலிக்காக காதலித்து ஏமாற்றிச் சென்ற காதலிக்காக காதலித்து ஏமாற்றிச் சென்ற காதலிக்காக இலங்கையில் 10 வருடங்களாக காத்திருந்த காதலன்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியாகின
Next articleவேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தற்கொலைக்கு முயற்சி