Home Local news காதலனால் கொலை செய்யப்பட்ட மாணவியின் மரணத்தில் புதிய சிக்கல்

காதலனால் கொலை செய்யப்பட்ட மாணவியின் மரணத்தில் புதிய சிக்கல்

கந்தளாய், அக்போபுர, பெரமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தளே பெரமடுவ கிராமத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தார்.

அன்றைய தினம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று அவர் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சிறுமியின் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் கூறுகையில், “கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உடலை கொடுக்க முடியாது என்று மருத்துவமனை கூறுகிறது. தகனம் செய்த பிறகு உடலை எப்படிப் பரிசோதிக்க முடியும். நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம்” என்றார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇளைஞன் வெட்டிக்கொலை! வடக்கு மடக்கும்புரவில் பயங்கரம்
Next articleகட்டுத்துவக்கு வெடிப்பு சம்பவம்: இளைஞரொருவர் படுகாயம்