Home மலைநாட்டு செய்திகள் காதணிகளை களவாட மூதாட்டி படுகொலை! வடக்கி மலை தோட்டத்தில் பயங்கரம்!

காதணிகளை களவாட மூதாட்டி படுகொலை! வடக்கி மலை தோட்டத்தில் பயங்கரம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மடக்கும்புற தோட்டத்தின் வடக்கி மலை பிரிவில் நேற்று மாலை கொலை சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த தோட்ட பிரிவில் வசித்து வந்த 84 வயதுடைய மூதாட்டி ஒருவரை இனம் தெரியாத நபர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.

குறித்த மூதாட்டி அணிந்திருந்த காதணிகளை களவாடி செல்வதற்காக அவரின் கைகளும் வாயும் துணியால் கட்டிய நிலையில் கழுத்து நசுக்கப்பட்டு காது அறுக்கப்பட்ட நிலையில் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று மாலை 5 மணியளவில் குறித்த மூதாட்டியின் மகன் ஒருவர் அவரை பார்வையிட வீட்டிற்கு சென்றபோது அவர் இறந்து கிடந்ததாகவும் பின்னர் சம்பவம் தொடர்பான தகவலை தலவாக்கலை போலீசாருக்கு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவலை போன்ற மிக மெல்லிய உடையில் கையை தூக்கி.. அந்த அழகை காட்டிய நிவேதா பெத்துராஜ்..! – மிரண்டு போன ரசிகர்கள்..!
Next articleதனது மாமனாருடன் இவ்வளவு மோசமாகவா போட்டோ எடுக்குறது! நீங்களே பாருங்க வைரல் புகைப்படம்