Home Local news காட்டுக்குள் வீசப்பட்டிருந்த கைக்குழந்தை உயிருடன் மீட்பு!

காட்டுக்குள் வீசப்பட்டிருந்த கைக்குழந்தை உயிருடன் மீட்பு!

பண்டுவஸ்நுவர, பண்டாரகொஸ்வத்தை, உகுருஸ்ஸகம ஏரிக்கரையில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையொன்று உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தை அழும் சத்தம் கேட்டு கால்நடைகளை கட்ட சென்ற பெண் ஒருவர் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை கண்டு, வழங்கிய தகவலின் அடிப்படையில் குழந்தை மீட்கப்பட்டது.

அங்கு வந்த கிராம மக்கள் அறிவித்ததன் பேரில் அம்புலன்ஸ் மூலம் குழந்தை நிகவெரட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிறந்த ஆண்குழந்தையின் தொப்புள்கொடி கூட அகற்றப்படாமல் இருந்தது.

வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் வீடு ஒன்றின் மீது பெட்றோல் குண்டு வீச்சு!
Next articleஇலங்கை தமிழ் காங்கிரஸின் மஞ்சள் சட்டை காடையர்கள் அட்டகாசம்! தியாகி திலீபனின் நினைவிடத்தில் அசிங்கம், சிரித்து வேடிக்கை பார்த்த கஜேந்திரகுமார்