Home CRIME NEWS காசு கொடுக்க மறுத்த வைத்தியரை குத்தி கொன்ற பிச்சைக்காரன்

காசு கொடுக்க மறுத்த வைத்தியரை குத்தி கொன்ற பிச்சைக்காரன்

தலங்கம, பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் நேற்றிரவு பிச்சைக்காரனால் கூரிய ஆயுதத்தினால் குத்தி கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட வைத்தியர் மாலபே, பொத்துவார வீதியில் வசிக்கும் 57 வயதுடைய நபர் என இனங்காணப்பட்டுள்ளார்.

பல்பொருள் அங்காடியில் இருந்து வெளியேறும் போது அங்கு இருந்த பிச்சைக்காரனுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் அடுத்து பிச்சைக்காரன் வைத்தியரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் பல்பொருள் அங்காடியில் உள்ள சி.சி. டிவியில் பதிவாகியுள்ளது. தப்பி ஓடிய பிச்சைக்காரனை கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் தலங்கம பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  வவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  கஜமுத்துக்களுடன் மூவர் கைது
READ MORE >>>  இலங்கையை வந்தடைந்து மேலும் 728000 அஸ்ராஸெனகா தடுப்பூசிகள்;
Previous articleபளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி
Next articleவர்த்தகரின் உயிரைப் பறித்த மண்ணெண்ணைய் வரிசை- படங்கள்