கடலூர் முதுநகர் அருகே வீட்டில் வளர்க்கும் நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.இன்று பல வீடுகளில் உரிமையாளர்களுக்கு பெரிதும் காவலாக இருப்பது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தான்.
உரிமையாளரால் செல்லமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் வளர்ப்பு பிள்ளையாகவே மாறிவிடுகின்றது.
இதனால் அதிக பிரியம் வைத்திருக்கும் நிலையில், செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கூட நடத்தி மகிழ்ந்து வருகின்றனர்.
கடலூர் முதுநகர் அருகே காரைக்காடு மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர், சங்கர் இவரது மனைவி ஜீவா. சங்கர் கடலூர் சிப்காட்டில் உள்ள, ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ஜாக்கி தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், அதற்கு வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்ததுடன், சீர்வரிசைகள் வைத்து கழுத்தில் தங்க சங்கிலி மற்றும் மாலை அணிவித்து, நலுங்கு வைத்து ஆசீர்வாதம் செய்துள்ளனர்.
சீர்வரிசையுடன் வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய குடும்பம்!
Join Our Telegram Group >> https://t.co/9mk8w16e3d#Cuddalore #Dog #ViralVideo #IBCTamil pic.twitter.com/ik0A9pdRhy
— IBC Tamil (@ibctamilmedia) May 26, 2022