Home Jaffna News கள்ள மாட்டிறைச்சியுடன் பயணம் செய்த பிள்ளையார் மாட்டினார்

கள்ள மாட்டிறைச்சியுடன் பயணம் செய்த பிள்ளையார் மாட்டினார்

நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பாடசாலையொன்றின் திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச் செல்லவுள்ளதாக

நெடுந்தீவிலிருந்து தீவக சிவில் சமூக உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் தகவல் வழங்கப்பட்டிருந்தது .

உடனடியாக கடற்படை மற்றும் ஊர்காவற்துறை பொலிசாருக்கு தீவக சிவில் சமூகத்தினரால் தகவல் வழங்கப்பட்டது .

அதற்கமைய புங்குடுதீவு மடத்துவெளி சோதனைசாவடியில் மேற்படி வாகனம் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட இறைச்சி கைப்பற்றப்பட்டதோடு இரு நபர்களும் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள மாட்டிறைச்சியுடன் பயணம் செய்த பிள்ளையார் மாட்டினார் நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article52 KG ஹெரோயினுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!
Next articleபயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் அலைந்து திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..!