Home CRIME NEWS கள்ளக்காதல் … காணி உரிமைக்காக நடந்த கொலை: 31 வருடங்களின் பின் சிக்கிய குற்றவாளிகள்!

கள்ளக்காதல் … காணி உரிமைக்காக நடந்த கொலை: 31 வருடங்களின் பின் சிக்கிய குற்றவாளிகள்!

தந்தையையும் மகனையும் கொன்று விட்டு 31 வருடங்களாக தலைமறைவாக இருந்த ஓய்வு பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

47 வயதான கருணாரத்ன என்பவரையும், அவரது மகனான 21 வயதுடைய ரஞ்சித் குமார ஆகிய இருவருமே கொல்லப்பட்டனர்.

கொலைசெய்யப்பட்ட கருணாரத்ன தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் மஹரகம பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் தனது இரண்டு பிள்ளைகளையும் விட்டுவிட்டு மனைவி, வேறு ஒரு ஆணுடன் ஓடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், தனது இரண்டு பிள்ளைகளையும் நுகேகொட பகுதியிலுள்ள நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு, குவைத்திற்கு பணிக்காக சென்றுள்ளார்.

அங்கு, வாதுவ பிரதேசத்தில் இருந்து வீட்டுப் பணிக்கு வந்த விதவை பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.

1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த அவர் மொரட்டுவை மெண்டிஸ் வீதியில் 12 பேர்ச்சஸ் வீடுடன் கூடிய காணி ஒன்றை வாங்கி மூன்று வருடங்களின் பின்னர் அந்த காணியை தனக்கு தொடர்புள்ள பெண், தனது மூத்த மகனின் பெயரில் எழுத ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த சமயத்தில் தனது காதலியுடன் 2 பிள்ளைகளையும் தங்க வைத்து விட்டு, மீண்டும் குவைத் சென்றுள்ளார்.

ஆனால் சிறிது காலத்திலேயே கருணாரத்னவின் பிள்ளைகளை வீட்டிலிருந்து வெளியேற்றிய அந்தப் பெண், வாதுவ பகுதியிலுள்ள தனது தாத்தாவின் வீட்டிற்கு அனுப்பி, அங்கு கூலி வேலைகள் செய்ய வைத்தார்.

1991ஆம் ஆண்டு கருணாரத்ன இலங்கை வந்தார். மொரட்டுவ வீட்டுக்கு வந்த போது, தனது காதலி பிறிதொரு திருமணம் செய்துள்ளதை அறிந்தார். அவர்களது திருமணப் புகைப்படம் வீட்டின் முன் தொங்கியது.

தனது பிள்ளைகளை தேடி கருணாரத்ன, வாதுவ சென்றார்.

சில நாட்களின் பின் மொரட்டுவ வீட்டிற்கு வந்த கருணாரத்ன, கதிரையில் அமர்ந்திருந்த போது, அவரது முகத்தில் காதலி மிளகாய்ப்பொடி வீசினார்.

அவரது கணவரான இராணுவ சிப்பாய், கருணாரத்னவின் தலையில் கொட்டனால் அடித்தார். கருணாரத்ன கொல்லப்பட்டார்.

பின்னர் இருவரும் சடலத்தை குளியலறைக்கு எடுத்துச் சென்று கூரிய ஆயுதத்தால் துண்டாக்கி, பாணந்துறைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு எடுத்துச் சென்று எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சில நாட்களின் பின்னர் கருணாரத்னவின் மகன் ரஞ்சித் குமார மொரட்டுவ வீட்டிற்கு வந்துள்ளார், பின்னர் குறித்த பெண்ணின் கணவரான ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் அவரை தந்திரமாக பிலியந்தலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு நண்பர்களுடன் மதுபான விருந்து நடத்திய ஓய்வுபெற்ற சிப்பாய், ரஞ்சித்குமாரவை கொன்று, அவரது பணப்பையை எடுத்துச் சென்றனர்.

பின்னர் கருணாரத்னவின் அடையாள அட்டை மோசடி செய்யப்பட்ட, காணி உரிமை அந்த பெண்ணின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது.

கருணாரத்னவின் 2வது மகன் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணை ஆரம்பித்து, ஓய்வுபெற்ற இராணுவச்சிப்பாய் கைதானார்.

இந்த இரட்டை கொலையுடன் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 01/10/2022, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleவல்வெட்டித்துறையில் அதிகாலையில் துயரம்! தீயில் எரிந்து கணவன், மனைவி பலியான சோகம்