Home மட்டக்களப்பு செய்திகள் கல்முனை வைத்தியசாலை அறைக்குள் கசமுசா: வைத்தியரையும், இளம்பெண்ணையும் சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!

கல்முனை வைத்தியசாலை அறைக்குள் கசமுசா: வைத்தியரையும், இளம்பெண்ணையும் சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள்!

கல்முனை வைத்தியசாலை வைத்திய அதிகாரியுடன் குடும்பப்பெண் வைத்தியசாலை தங்குமிட அறையில் தனிமையில் இருந்ததாக தெரிவித்து பதற்ற நிலை ஒன்று ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (27) மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் செல்லவிருந்த 36 வயதுடைய வைத்தியர் இரத்தினபுரி மாவட்டம் பெல்மதுளை பகுதியை சேர்ந்தவர்.

கடந்த காலங்களில் இவ்வைத்தியசாலையில் கதிரியக்கவியல்(radiologist specialist) விசேட வைத்திய நிபுணராக கடமையாற்றி வந்துள்ளதுடன் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை(28) அன்று இடமாற்றலாகி செல்லவிருந்தார்.

கல்முனை வைத்தியசாலை

இந்நிலையில் இவ்வைத்தியருக்கு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிற்கும் தனியார் மருத்துவ சிகிச்சை நிலையமொன்றில் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அந்த உறவு தொடர்ந்து வந்துள்ளது. இப்பெண்ணின் கணவர் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றி வருவதுடன் 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.

மேற்படி இவ்விருவரும் சம்மாந்துறை பகுதியில் உள்ள தனியார் மருத்துவ சிகிச்சை பிரிவில் சந்தித்துள்ளதுடன் தத்தமது காதல் தொடர்பினையும் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பு அம்பாறை பகுதியில் உள்ள ஹோட்டல்கள் உல்லாச விடுதிகளுக்கு பயணம் செய்து இவ்விருவரும் சந்தோசமாக வாழ்ந்துள்ளனர்.

பின்னர் திடிரென வைத்தியருக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நிலையில் தான் சேவை மேற்கொண்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தனக்கென வழங்கப்பட்ட தங்குமிட அறைக்கு குறித்த இளம் பெண்ணணை அழைத்து சென்றுள்ளார்.

இதன் போது வைத்தியரின் செயலை அறிந்து பொதுமக்களும் வைத்தியசாலை தரப்பின் சிலரும் இணைந்து தங்குமிட அறையில் இருந்த வைத்தியர், அந்த பெண்ணை உடனடியாக அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன் அங்கு சிறு பதற்றமும் ஏற்பட்டது.

கல்முனை வைத்தியசாலை

இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரின் முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று வைத்தியர், இளம் பெண்ணை பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்தியர், இளம் பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் தொடர்புபட்ட வைத்தியருக்கு எதிராக உள்ள விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பா.டிலான்-

கல்முனை வைத்தியசாலை கல்முனை வைத்தியசாலை.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இதயத்துடிப்பை அதிகரிக்கவைக்கும் ஷாக் தகவல்
Next articleமறைந்த காமெடி நடிகர் குமரி முத்துவின் மகள் இவரா ? யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம்