மன்னார் இலுப்பகடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூராய் பிரதான வீதியில் வைத்து 131கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட குற்றபுலணாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே கூழர் வாகனத்தில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட கேரளா கஞ்சாவுடன் இவ் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல்ல வீரசிங்க வின் பணிப்பில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி மற்றும் மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு தற்காலிக பொறுப்பதிகாரி i.p.அசங்க, உ.பொ.ப.ராமநாயக தலைமையிலான அணியினர் மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதில் சந்தேகநபர்கள் இருவரும் கல்பிட்டி பகுதியை சேர்தவர்களாவர்,
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கூலர் வாகனம் என்பன மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளது.