ஆரம்பக் கல்வி கற்றல் கற்பித்தலுக்கு உதவ புதிய தொலைக்காட்சி அலைவரிசை – கல்வி டிவி 2 டான் குழுமம் ஆரம்பித்து வைத்தது.
ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளுக்கு பங்களிப்பதற்காக டான் குழுமம் கல்வி டிவி 2 என்ற அலைவரிசையை இன்று யாழ்ப்பாணத்திலுள்ள டான் டிவி கலையகத்தில் அங்குரார்ப்பணம் செய்தது
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் திரு.நாமல் ராஜபக்ச இந்த அலைவரிசையை சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார்
இதன்போது யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு அங்கஜன் இராமநாதன் வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ல்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்
சிவஸ்ரீ கமலராஜ குருக்கள் ,அருட்பணி ஜீவா போல் அடிகளார் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்
யாழ் மாவட்ட அரச அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன், வடக்கு கல்வி அமைச்சு செயலாளர் திரு எல். இளங்கோவன், யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை ,கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் திரு ச.லலீசன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்
டான் குழும தலைவர் திரு எஸ். எஸ். குகநாதன் நிறைவுரை நல்கினார்
டான் கல்வி டிவி 2 இலங்கையில் ஆரம்பக்கல்வி மாணவர்களை மையப்படுத்தி தொடங்கப் பெற்ற முதலாவது தொலைக்காட்சி அலைவரிசை ஆகும்