சிங்கராஜ வனத்திற்கு அருகாமையிலுள்ள லங்காகம என்ற பகுதியில் மக்கள் பயணிப்பதற்கு நீண்டகாலமாக சீரான பாதைகள் இல்லாமையினால் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியதுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை கயிறு ஒன்றை பிடித்து தொங்கி கொண்டு பயணித்துவந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கையில் கடற்படையினரால் பாலமொன்று அமைக்கப்பட்டு நேற்று 10 ஆம் திகதி தென் மாகாண ஆளுநர் டாக்டர் வில்லி கமகேவின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் Nishantha Ulugetenne இனால் திறந்து வைக்கப்பட்டது.
84 மீற்றர் நீளமும் 1.8 மீற்றர் அகலமும் கொண்ட இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படையால் ஆரம்பிக்கப்பட்டு அதன் கட்டுமானத்தை குறுகிய காலத்தில் முடித்து திறந்து வைத்துள்ளனர்.
ஜின் கங்கை வழியாக லங்காகம மற்றும் நில்வெல்லாவை இணைக்கும் இந்த புதிய பாலம், கிராமமக்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளை இலகுவாக மேற்கொள்ளமுடிந்துள்ளது.
அண்மையில் லங்காகம பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள வீதிகள் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்தமையும் குறிப்பிடத்தக்கது.