Home Cinema கமல் நடித்த விக்ரம் ட்ரைலரில் முகத்தை மூடி வருபவர் சூர்யாவா ? விக்ரம் ட்ரைலர்...

கமல் நடித்த விக்ரம் ட்ரைலரில் முகத்தை மூடி வருபவர் சூர்யாவா ? விக்ரம் ட்ரைலர் விமர்சனம்

உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனிடையே இத்திரைப்படத்தில் பிரபல மாஸ் நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக், பத்தல பத்தல பாடல் உள்ளிட்டவற்றை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

ட்ரெய்லரில் விஜய் சேதுபதி, பகத் பாசில், கமலஹாசனின் ஆக்சன் காட்சிகளும், ஆணித்தரமான வசனங்களும் இடம் பெற்றிருந்தன. மேலும் நடிகர் சூர்யா வெள்ளை சட்டை அணிந்து புறம் காட்டி நிற்கும் காட்சி ஒன்று இத்திரைப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இதனிடையே விக்ரம் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

கமல் நடித்த விக்ரம் ட்ரைலரில் முகத்தை மூடி வருபவர் சூர்யாவா ? விக்ரம் ட்ரைலர் விமர்சனம்

மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இப்படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிகர் சூர்யா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டது.

கமல் நடித்த விக்ரம் ட்ரைலரில் முகத்தை மூடி வருபவர் சூர்யாவா ? விக்ரம் ட்ரைலர் விமர்சனம்

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ட்ரெய்லரில் நடிகர் சூர்யாவின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கமல் நடித்த விக்ரம் ட்ரைலரில் முகத்தை மூடி வருபவர் சூர்யாவா ? விக்ரம் ட்ரைலர் விமர்சனம்

மேலும் ட்ரெய்லரில் முகத்தை மூடி வருபவரும், கையில் இருந்த கத்தியை எறிபவரும் சூர்யா தான் என்று கூறுகின்றனர். இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமஹிந்த ராஜபக்‌ஷவின் நாய்க்குட்டியை திருடிய யுவதி கைது!
Next articleதூக்கில் பிணமாக தொங்கிய சீரியல் நடிகை! தற்கொலையா? – போலீஸார் விசாரணை!