கமலுக்கே மரண பயத்தை காட்டிய லோகேஷ் கனகராஜ் !! ஆண்டவருக்கே இந்த நில்மையா ?

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ள படம் விக்ரம். மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் கற்றுக்கொண்ட அனைத்து வித்தைகளையும் விக்ரம் படத்தில் திணித்துள்ளார்.

பல கோடி பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் கமல்ஹாசனை இளமை தோற்றத்தில் காட்டுவதற்காக மட்டும் கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார் லோகேஷ். அப்படியொரு எதிர்ப்பார்ப்புகளுடன் இருக்கும் ரசிகர்களுக்கு நல்ல படத்தினை கொடுக்க லோகேஷ் பல வேலைகளை செய்துள்ளாராம்.

தற்போது பல படங்களை திருடி இணையத்தில் வெளியிட்டும், கஷ்டப்பட்டு எடுத்த படத்தை காப்பி படம் என்று கூறி குற்றம் சாட்டி வருகிறார்கள். இதனால் பயத்தில் இங்கே என் படத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதற்காக டெல்லியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தில் விக்ரம் படத்தினை பதிவு செய்துள்ளார்.

எல்லா மொழிகளில் டப் செய்து வெளியாகவுள்ள நிலையில் கதையின் பாதுகாப்பு கருதி ரிஜிஸ்ட்ரேஷன் ஆபிஸில் பதிவு செய்திருக்கிறார். விக்ரம் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய விலைக்கு விற்கப்படுகிறதாம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..