பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா சமீபத்தில் பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
மக்கள் மனதில் நல்ல இடத்தினை பிடித்த பிரியங்கா தன்னுடைய காமெடியான பேச்சால் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருவார்.
அப்படியிருக்கையில் தற்போது பிரியங்கா நடிப்பில் களமிரங்கவுள்ளதாக் செய்திகள் வெளியாகியுள்ளது. மாகாபாவுடன் இத்தனை நாட்கள் பழகி தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா மிர்ச்சி செந்திலுடன் இணைந்து புதிய விளம்பரத்தில் நடிக்கவுள்ளார்.
இதனை சமீபத்தில் மிர்சி செந்தில் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.