Home Tamil News கண்டெடுத்த தங்க நகை ஆசிரியையிடம் ஒப்படைப்பு

கண்டெடுத்த தங்க நகை ஆசிரியையிடம் ஒப்படைப்பு

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 09 சீ பிரிவை சேர்ந்த மாணவர்களான என்.எம் சப்ரின், கே. கைப் சக்கி, ஏ.எம்.எம் அஸ்ஜத் ஆகிய மூன்று மாணவர்களும், இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க கைப்பட்டியைக் கல்லூரி வளாகத்தில் கண்டெடுத்து, கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றது.

இந்த மூன்று மாணவர்களும், தாம் கண்டெடுத்த ​கைப்பட்டி தொடர்பாக உரையாடி, தரம் 09 பகுதித் தலைவர் எம்.எஸ்.ஏ சிராஜ் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இம்மாணவர்களது நன்நெறி மிக்க முன்மாதிரி நடத்தையைப் கல்லூரி அதிபர் எம்.ஐ ஜாபிர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டியதுடன், காலைக் கூட்டத்தில், குறித்த ஆசிரியையிடம் தங்க நகையும் ஒப்படைக்கப்பட்டது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகட்டுப்பாட்டை இழந்த பேருந்து குடைசாய்ந்தது
Next articleதந்தையை கொன்று தீ வைத்து எரித்த மகன்