கோவிட் வைரஸ் தொற்றிய நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேர் கடந்த இரண்டு தினங்களில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் தகவல்கள் கூறுகின்றன.
உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பெண்கள். கடந்த 22 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 73 வயதுக்கு உட்டப்பட்டவர்கள் என கண்டி தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.