கண்டியில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் திடுக்கிடும் தகவல்

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற புகையிரதத்தில், கண்டியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனை நபர் ஒருவர் கடத்திச் சென்ற போது பொதுமக்களிடம் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபரையும், சிறுவனையும் மஹரகம புகையிரத நிலைய பொலிஸ் அதிகாரியிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் நேற்று (4) இரவு 8.00 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து அவிசாவளை நோக்கி செல்லும் ரயிலில் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளார்.

ரயிலில் சிறுவன் அழுதுகொண்டு வந்ததும், மற்றும் இருவரின் நடத்தை குறித்து சந்தேகம் அடைந்த பயணிகள், குறித்த நபரிடம் விசாரித்த போது, ​​அவர் ரயிலில் இருந்து தப்பி ஓட முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் கடத்தப்பட்ட குறித்த சிறுவன் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..