திருச்சியில் கள்ளக்காதலை கண்டித்த மாற்றுத் திறனாளி கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி போலீசில் சரணடைந்தார்.
திருச்சி மாநகர் தாராநல்லூர் பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஷேக் தாவூத் (34). மாற்றுத்திறனாளி ஆன இவர், தில்லைநகரில் உள்ள தையல் கடையில் பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி ரகமத் பேகம் (31). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரகமத் பேகத்திற்கும், அவரது உறவினர் அப்துல் அஜீஸ் என்பவருக்கும் கள்ளக்காதல் காதல் இருந்து வந்துள்ளது.
இதனை அறிந்த, ஷேக் தாவூத், இருவரையும் கண்டித்து உள்ளார். தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொல்ல திட்டமிட்ட ரகமத் பேகம், அதற்கு நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் ஷேக்தாவூத் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார். இதுதான் சரியான நேரம் என கருதிய ரகமத் பேகம், அப்துல் அஜீஸை வரவழைத்து, அவருடன் சேர்ந்து ஷேக் தாவூத்தின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்தார்.
பின்னர், இவரும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இருவரையும் கைது செய்த, போலீசார் அவர்கள் அளித்த தகவலின் பேரில் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து இவருரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.