Home world news கணவரை ஏலத்தில் விட்ட பெண்ணால் பரபரப்பு!

கணவரை ஏலத்தில் விட்ட பெண்ணால் பரபரப்பு!

அயர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த சேர்ந்தவர் ஜோன். இவரது மனைவி லிண்டா மெக் அலிஸ்டர். இந்த தம்பதிக்கு கோல்ட் எனும் 4 வயது மகனும், ரைடர் எனும் 6 வயது மகனும் உள்ளனர். ஜான் மற்றும் லிண்டா தம்பதி, கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் லிண்டா மெக் அலிஸ்டர் தனது கணவரை ஒன்லைனில் விற்பனை ஏலத்திற்கு விட்டுள்ளார். இது தொடர்பான தகவலை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

லிண்டா மெக் அலிஸ்டர் வெளியிட்டிருந்த விளம்பரத்தில், “எனது கணவர் 6 அடி 1 அங்குலம் உடையவர். அவருக்கு வயது 37. மீன்பிடிக்க விரும்புவார். மிகவும் நல்லவர். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.

அவருக்கு முறையாக உணவு வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது” என்று, குறிப்பிட்டிருந்தார். மேலும், ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்த ஏல போஸ்டினை போட்டிருந்த நிலையில், இதனை உண்மையென நம்பிய 12 பெண்கள் ஏலத்தில் பங்கேற்று ஜோனை வாங்க முயற்சி செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்தை பார்த்து அவருடைய நண்பர்கள் ஜோனுக்கு தெரிவிக்கும் வரை அதுவரை அவருக்கு இது குறித்து தெரியவில்லை.

மேலும், இந்த விளம்பரம் குறித்து அறிந்த பிறகு, ஜோன் கோபம் கொள்ளவில்லை, வேடிக்கையாக சிரித்தார் என்று லிண்டா கூறியிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதூக்கில் தொங்கிய இவந்திகா குமாரி; துலங்கிய மர்மம்.
Next articleயாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு ! இருவர் இழப்பு