Home Tamil News கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் தகாத உறவு மூலம் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த...

கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் தகாத உறவு மூலம் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த கொடூர தாய்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எரித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை இன்று (12) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்ரஸா நகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் தகாத உறவு மூலம் பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த கொடூர தாய்

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேறு ஒரு நபருடன் உள்ள தகாத உறவு மூலம் நேற்றிரவு (11) சிசு பிறந்துள்ளதாகவும்,

பிறந்த சிசுவினை கொலை செய்து எரித்துள்ள நிலையில் அதனை தெரு நாய்கள் கவ்விச் சென்ற நிலையில்

அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சிசுவினை பிரசவித்த பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனார்.

பாலியல் துஸ்பிரயோகம் | சமூக சீர்கேடு | வாள்வெட்டு | ஆவா குழு | துஷ்பிரயோகங்கள்

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article103 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா யாழில் மீட்பு
Next articleமஸ்கெலியாவில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்