Home mannar news கட்டுப்பாடற்ற வேகம் சிறுவனை மோதி தள்ளி இழுத்து சென்ற மோட்டார் சைக்கிள்..! படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா...

கட்டுப்பாடற்ற வேகம் சிறுவனை மோதி தள்ளி இழுத்து சென்ற மோட்டார் சைக்கிள்..! படுகாயமடைந்த சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..

கட்டுப்பாடற்ற வேகத்தினால் 7 வயது சிறுவனை மோதி தள்ளிய மோட்டார் சைக்கிள், சிறிது துாரம் சிறுவனை இழுத்துச் சென்ற சம்பவம் மன்னார் பிரதான வீதியில் சிறுவர் பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த 07 வயது சிறுவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன், அவருடைய தாய் உள்ளடங்களாக மூவர் இன்று (22) காலை மன்னார் சிறுவர் பூங்கா பிரதான வீதியூடாக நடந்து சென்ற நிலையில் குறித்த வீதியூடாக அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் குறித்த சிறுவனை மோதியதோடு, சிறிது தூரம் மோட்டார் சைக்கிலில் குறித்த சிறுவன் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அப்பகுதியால் சென்றவர்கள் சிறுவனை மீட்டு மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சிறுவன் படுகாயம் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த விபத்து தொடர்பாகவும், விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகவும்,பொலிஸார் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

more news… visit here
READ MORE >>>  கொரோனா அபாயம் அதிகரித்து வருகிறது; சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
READ MORE >>>  தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் நந்திக்கடலில் அஞ்சலி
READ MORE >>>  தமிழினப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளில் நந்திக்கடலில் அஞ்சலி
Previous articleஎரிபொருள் நிலைய உரிமையாளரின் வீட்டிற்கு தீ
Next articleவவுனியாவில் எரிவாயு வாகனம் மக்களால் முற்றுகை