மட்டு. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (07) மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
ஆறுமுகத்தான் குடியிருப்பு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கணேஸ் விமலராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த நபர் சம்பவ தினமான நேற்று மாலை ஏறாவூர் கடற்கரையில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
more news… visit here
Google News
ஏனைய தளங்களிற்கு செல்ல..
உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..