Home முல்லைத்தீவு செய்திகள் கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாயம்

கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாயம்

முல்லைத்தீவு – செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளனர்.

அளம்பில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக வருகைதந்த நிலையில், கடல் வழமைக்கு மாறாகக் கொந்தளிப்பாகக் காணப்பட்டும் அதனையும் பொருட்படுத்தாது கடலில் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றும் நோக்கோடு ஏனைய இரு சகோதரர்களும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போது அவர்களும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளனர்.

யாழ். வீதி அலம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் செம்மலை கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

தாழமுக்கம் காரணமாகக் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடலில் நீராட சென்ற கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாயம் கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மாயம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமகிந்தவின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்ட பெண்! ஊடகங்களுக்கு அவர் பகிரங்கப்படுத்தும் தகவல்
Next articleவிக்ரம் படத்தில் நடித்தது குறித்து விஜய் சேதுபதி கூறிய உண்மை இதோ !!