கடற்கரைக்கு செல்லும் போதே யுவதிகள் புகையிரத விபத்தில் சிக்கினர்!

வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் ரயிலில் மோதியதில் ஒரு யுவதி உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (28) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதி தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உடபுஸ்ஸெல்லாவ, கோல்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாதவன் கிரிஜா என்ற யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது மூத்த சகோதரியான மாதவன் மனோஜா, படுகாயமடைந்து களுபோவில, தென் கொழும்பு போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனையை களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி எஸ்.கே.பி.ஜனக கொடிகார முன்னிலையில் நேற்று (29) நடைபெற்றது.

குறித்த யுவதிகள் இருவரும் வெள்ளவத்தை கடற்கரைக்கு செல்வதற்காக புகையிரத பாதையை கடக்கும்போது கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்ததாக மரண விசாரணை அதிகாரி ஜனக கொடிகார தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..