இயக்குனர் ஹரி தனது ஆக்ஷன் படங்களுக்கு பெயர் பெற்றவர். ஹரி இயக்கிய படங்களின் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால் அவரது படத்திற்கு குடும்ப பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர் டி ராஜேந்தர். தன் மகன் சிலம்பரசன் என்கிற சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படித்தி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்கிற அங்கீகாரத்தினை பெற வைத்துள்ளார்.
பெரும்பாலும் நடனம் நல்ல நடிப்பு என்று வெளுத்து வாங்கிய சிம்பி சமீப ஆண்டுகளாக பல சர்ச்சையில் சிக்கி சினிமா வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். பல ஆண்டுகள் கழித்து மெகா ஹிட்டாக கம்பேக் கொடுத்த படம் மாநாடு. அப்படத்தின் மூலம் பல பிரச்சனைகள் சர்ச்சைகளை தூக்கி உடைத்தார்.
இந்நிலையில், சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக தான் வருவார் என பல பட இயக்குனர்கள் படக்குழுவினர்கள் தெரிவித்திருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் நடிகர் சிம்பு கோவில் படப்பிடிப்பிற்கு எப்போதுமே தாமதமாக வருவாராம். ஆனால் இயக்குனர் ஹரி தான் நினைத்த நேரத்திற்குள் படத்தினை முடித்து கொடுக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர்.
இதில் எப்போதுமே சமாதானம் செய்து கொள்ள மாட்டாராம். இதனால் இயக்குனர் ஹரிக்கு சிம்பு லேட்டாக வருவதால் பயங்கரமாக கோபம் வருமாம். இதனிடையே ஒருமுறை தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியாத ஹரி, உதவி இயக்குனர்களை திட்டுவதை போல சாடை மாடையாக சிம்புவை திட்டினாராம்.
காசு வாங்கிட்டு தான படத்துல வேலை பாக்குறீங்க சரியான நேரத்துக்கு ஷூட்டிங்கிற்கு வர முடியாதா என காட்டமாக சிம்புவிற்கு முன்னாள் திட்டினாராம் இயக்குனர் ஹரி.
இதை அறிந்து கொண்ட சிம்பு இந்த படத்தின் வெற்றிக்கு பின்பும் இயக்குனர் ஹரியோடு இன்றுவரை கை கோர்க்காமல் இருந்து வருகிறாராம். ஆனால் அதையெல்லாம் காதில் போடாமலும் கண்டு கொள்ளாமலும் இருக்கும் சிம்பு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி ஹிட் கொடுக்க காத்திருக்கிறார்.
இதை உணர்ந்த சிம்பு, படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வந்து படத்தை முடித்தார். இந்த தகவலை பிரபல வர்ணனையாளர் பயிற்சியாளர் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்