Home Accident News ஓந்தாச்சிமடத்தில் விபத்து- மூவர் படுகாயம்

ஓந்தாச்சிமடத்தில் விபத்து- மூவர் படுகாயம்

மட்டக்களப்பு- ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த மூவரும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) எருவில் கோடைமேடு கிராமத்தை சேர்ந்த இருவர், தமது மோட்டார் சைக்கிளில், மட்டக்களப்பு- கல்முனை நெடுஞ்சாலை வீதியில் அட்டாளைச்சேனைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது ஓந்தாச்சிமடம் கிராமத்தின் உள்வீதியாக வந்த (60 வயது) தாயொருவர், பாதையை கவனிக்காமல் கடப்பதற்கு முற்படுகையிலேயே இந்த விபத்து சம்பவித்ததாக பாதசாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் வயோதிபத்தாய் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த (29 மற்றும் 53வயது) இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமட்டக்களப்பு – திக்கோடை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
Next articleகளுதாவளையில் 21 சிறுவர்களுக்கு கொரோனா