Home மட்டக்களப்பு செய்திகள் ஓட்டமாவடியில் கொரோனாவினால் மரணமடைந்த 660 உடல்கள் அடக்கம்!

ஓட்டமாவடியில் கொரோனாவினால் மரணமடைந்த 660 உடல்கள் அடக்கம்!

கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் புதன்கிழமை (17.06.2021) மாலை வரை 660 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் “மஜ்மா நகரில்” அமைந்துள்ள கொரோனா மையவாடியில் 17.06.2021 வரை 622 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டுள்ளதுடன்; 15 இந்து உடல்களும், 14 கிறிஸ்தவ உடல்களும்; 07 பௌத்த உடல்களும், 02 வெளிநாட்டவர்களின் உடல்களுமாக மொத்தம் 660 உடல்கள் அடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.

video

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபல துன்பங்களையும், கஷ்டங்களையும் தொடராக எதிர்நோக்கிக் கொண்டு வரும் சம்பூர் கிராம மக்கள் !
Next article10000 மண் மூடைகளை தோளில் சுமந்து அணைக்கட்டு கட்டும் விவசாயிகள்