தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது வாரத்தில் அது வெகுவாகக் குறைந்தது. இப்படம் பிரமாண்டமான ஓப்பனிங்கை எடுத்து முதல் வாரத்தில் நிகழ்வுகள் நிறைந்தது. இருப்பினும், யாஷின் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 விரைவில் பாக்ஸ் ஆபிஸில் அதை முறியடித்தது.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு என்ற ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழிக்கு ஏற்றவாறு ஒரு நிகழ்வு தான் தற்போது சன் பிக்ச்சர்ஸால் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அண்மையில் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் பீஸ்ட். தளபதி விஜய் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
டாக்டர் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நெல்சன் என்பதால் பீஸ்ட் படத்திற்க்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. அதற்கு அடுத்த நாள் வெளியாக இருந்த கே.ஜி.எப் 2 திரைப்பட ட்ரைலர் வெளியாகிய உடன், பீஸ்ட் டிரைலரும் அதிரடியாக வெளியானது.
இதனை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என நினைத்த ரசிகர்ளுக்கு ஏமாற்றமே.அதே போல கே.ஜி.எப் 2வின் பிரமாண்ட வெற்றி பீஸ்ட் படத்தை வெகுவாக பாதித்தது. இதனால் முதல் 5 நாள் கழித்து பீஸ்ட் இருந்த இடம் தெரியாமல் தியேட்டர் எண்ணிக்கை சுருங்கி போய்விட்டது என்பதே உண்மை.
இப்படி விஜய் ரசிகர்களே ஏற்கனவே நொந்து போயுள்ளனர். விஜயின் அடுத்த பட அப்டேட் எப்போது வரும் அது எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என நினைத்திருக்கையில், மீண்டும் பீஸ்ட் படத்தை ப்ரோமோஷன் செய்யும் வண்ணம், சன் பிக்ச்சர்ஸ் குழு, தற்போது ஓர் விடியோவை வெளியிட்டுள்ள்ளது.
அதில், பீஸ்ட் மால் செட் எப்படி உருவானது என பட இயக்குனர் நெல்சன், கலை இயக்குனர் கிரண் ஆகியோர் கூறும் ஒரு மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது. அதற்கு கீழே, பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அரபிக் குத்து பாடல் வீடியோ வெளியாக வேண்டிய நேரத்தில், பீஸ்ட் OTT செய்தி வரும் நேரத்தில் இதெல்லாம் தேவைதானா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதனால், பீஸ்ட் திரைப்படத்தின் திரையரங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றுடுடன் சுமார் 90% சதவீத திரையரங்கில் பீஸ்ட் படத்தை தூக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் பீஸ்ட் திரைப்படம் மாபெரும் சறுக்கலை சந்தித்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றனர்.
பீஸ்ட் என்பது நெல்சன் திலீப்குமார் இயக்கிய பணயக்கைதி நாடகம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தளபதி விஜய் ரா ஏஜென்ட் வீரராகவன் வேடத்தில் நடித்திருந்தார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.