ஒரு கப் டீ யுடன் இந்த இந்த மூலிகை டீயை தினமும் கப் குடிச்சு பாருங்க !! ஆரோக்கிய தகவல்

பொதுவாக நோய் தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக மிக அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் பல உள்ளன. தினமும் ஒரே மாதிரியான கஷாயம், மூலிகை என்று சாப்பிடுவதற்கு பதில் வேறு வழிகளில் முயற்சி செய்யும் போது எந்த வித பிரச்னையும், சோர்வும் இன்றி ஆரோக்கியத்தை காக்கலாம்.

அந்தவகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு ஒரு மூலிகை டீ ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை
தண்ணீர் – அரை லிட்டர்
இமாலய உப்பு- சிறிதளவு
ஓமம் – கால் டீஸ்பூன்
சீரகம் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
லவங்கம் 1
பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்
பட்டை பொடித்தது – ஒரு டீஸ்பூன்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்த பிறகு எடுத்து வைத்த பொருட்களை அதில் போட வேண்டும்.

பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட வேண்டும். ஐந்து நிமிடங்களில் சாறு இறங்கிவிடும்.

அதன் பிறகு சூடாக அதை அருந்தலாம். ஹிமாலய ராக் உப்புக்கு பதில் தேன் கலந்தும் அருந்தலாம்.
நன்மைகள்
சீரகம் செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பெருஞ்சீரகம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு புத்துணர்வு தரும்.

மஞ்சள் நோய் எதிர்ப்பு செற்களைத் தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

பட்டை உடலில் செல்கள் அளவில் ஏற்படும் அழற்ச்சியை சரி செய்ய உதவுகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.

ஓமம் கொலஸ்டிரால் அளவைக் குறைக்க உதவுகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. சுவாசப் பிரச்னைகளை போக்கி, காற்று நன்றாக சென்று வர துணை செய்கிறது. செல்கள் அளவில் ஏற்படக் கூடிய அழற்சியைக் கட்டுப்படுத்துகிறது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..