Home Indian news ஒன்லைனில் பாடம் கற்காத மகனை கொலை செய்த தாய்; தானும் தூக்கிட்டு தற்கொலை!

ஒன்லைனில் பாடம் கற்காத மகனை கொலை செய்த தாய்; தானும் தூக்கிட்டு தற்கொலை!

ஒன்லைனில் பாடம் படிக்காததால் 4 வயது மகனை கொன்று, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பயங்கர சம்பவம் ஒன்று மராட்டியத்தில் இடம்பெற்றுள்ளது.

மராட்டிய மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருபவர் சாகர் பாட்டக். இவரது மனைவி சிக்கா (வயது 32). இவர்களது மகன் ரிதான் (4). மழலையர் பாடசாலையில் சேர்க்கப்பட்டிருந்தான். சம்பவத்தன்று சிறுவன் ரிதான் ஒன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டு தனமாக இருந்தான். இதனால் ஆத்திரமடைந்த சிக்கா அங்கிருந்த தலையணையால் சிறுவன் ரிதானின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார். இதில் சிறுவனின் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்துள்ளான்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிக்கா தனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே நவிமும்பை ஐரோலியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற கட்டாயப்படுத்திய தாயை அவரது 15 வயது மகள் கொன்ற பயங்கரத்தை தொடர்ந்து, நாசிக்கில் ஒன்லைனில் பாடம் படிக்காத மகனை கொன்று தாய் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதடுப்பூசி தொடர்பில் கையை விரித்த விசேட வைத்திய நிபுணர்கள்!
Next articleடெல்டா தீவிரமடைந்துள்ளதால் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு!