திருகோணமலை பொது வைத்தியசாலை யின் அவசர சிகிச்சை பிரிவு ஒன்றில் கடமையாற்றும் தாதிய உத்தியோகஸ்தர்களில் ஐவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் இவர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 15ற்கும் மேற்பட்ட தாதிய உத்தியோகஸ்தர்கள் பேச்சளவில் சுயதனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் பீ சி ஆர் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
குறித்த தாதிய உத்தியோகஸ்தர்கள் மாஸ்க் அணியாத நிலையில் கடமை செய்ததாகவும் இதனால் பல நோயாளர்கள் நிலை கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதாகவும் நோயாளர் உறவுகள் மூலம் தெரியவருகின்றது.
இதேவேளை, வைத்தியசாலையில் நேற்று மட்டும் 20தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.