சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் நாயகனாக வளர்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடந்த 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது
இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அதில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார்.கல்லூரி, அப்பா-மகன் சென்டிமென்ட் என கதைக்களம் அமைந்திருக்கிறது.
அதிலும் சென்டிமென்ட் காட்சிகள் மக்களை அதிகம் அழ வைத்துவிட்டதாக அனைவருமே கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் டான் படம் வெளியாகிய 9 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 54 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம்.
கண்டிப்பாக சிவகார்த்திகேயன் வளர்ச்சி படத்திற்கு படம் அதிகமாகி கொண்டே தான் வருகிறது.