தனுஷின் வெண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி-நயன்தாரா நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் நானும் ரவுடித்தான்.
விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, காதம்பரி என்ற வேடத்திற்கு சிறந்த நாயகிக்கான விருது கூட நயன்தாராவிற்கு நிறைய கிடைத்தது.
அப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலர்களாக மாறினார்கள், இப்போது வரை காதலர்களாக தான் இருக்கிறார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நயன்தாரா கூறியிருந்தார்.ஆனால் திருமணம் எப்போது என்பது மட்டும் பிரபலங்கள் அறிவிக்கவே இல்லை. மாறாக எப்போது ஒன்றாக அடிக்கடி கோவில்களுக்கு மட்டும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
காத்து வாக்குல ரெண்டு காதல் பட ரிலீஸின் போது திருப்பதி சென்று தரிசனம் செய்தார்கள், அண்மையில் ஷீரடி சென்றுள்ளார்கள். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருக்கிறார்.
தற்போது என்ன தகவல் என்றால் விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமணம் வரும் ஜுன் 9ம் தேதி என தகவல் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது. அதோடு திருப்பதியில் தான் அவர்களது திருமணம் நடக்க உள்ளதாம்.
அஜித் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது ..
இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது ..