ஏழாலையில் எரிபொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் சிக்கினர்!
யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக பொலிஸ் விசேட படையணியினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுன்னாகம் பொலிசாரால் இன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குப்பிளான், ஏழாலை பகுதிகளை சேர்ந்த இருவரே கைதாகினர்.
அவர்களிடமிருந்து 1,670 லீற்றர் மண்ணெண்ணெய், 310 லீற்றர் பெற்றோல், 240 லீற்றர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.